மீண்டும் சம்பவம் செய்ய வரும் சிவா! ‘தமிழ்ப் படம் 3’ அப்டேட்

‘தமிழ்ப் படம்’ மற்றும் ‘தமிழ்ப் படம் 2’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘தமிழ்ப் படம் 3’ உருவாகும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பை அடுத்த வாரம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க, ‘அகில உலக சூப்பர்ஸ்டார்’ சிவா களமிறங்கவுள்ளதால், ‘தமிழ்ப் படம் 3’ மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது! 😎🔥