கே.எம்.சி.ஹெச். மருந்தியல் மற்றும் பிசியோதெரபி கல்லூரி பட்டமளிப்பு விழா

கோவை காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள கே.எம்.சி.ஹெச். மருந்தியல் கல்லூரி மற்றும் கே.எம்.சி.ஹெச். பிசியோதெரபி கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு கே.எம்.சி.ஹெச். மருந்தியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ. ராஜசேகரன் வரவேற்புரை வழங்கினார்.

டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தலைமை தாங்கி உரையாற்றினார்.

மணிபால் உயர் கல்வி அகாடமியின் துணைவேந்தர் டாக்டர் சரத்குமார் ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பட்டதாரிகளுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.

கல்வி மற்றும் அறிவை மக்களுக்கும், பொதுச் சுகாதார மேம்பாட்டிற்கும் பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

விழாவில் மருந்தியல் மற்றும் பிசியோதெரபி துறைகளைச் சேர்ந்த 241 இளநிலை மற்றும் 173 முதுகலை என மொத்தம் 414 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற 8 மாணவ, மாணவிகளும் பாராட்டுச் சான்றிதழ்களுடன் கவுரவிக்கப்பட்டனர்.

டாக்டர் மோகன் சேதுபதி, டாக்டர் அருண் என். பழனிசாமி, மதுரா வி. பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

கே.எம்.சி.ஹெச். பிசியோதெரபி கல்லூரி முதல்வர் டாக்டர் கார்த்திக் பாபு எஸ். நன்றியுரை வழங்கினார்.

விழாவில் கே.எம்.சி.ஹெச். மற்றும் டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள், சுகாதார அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.