ஊட்டியில் மினி பேருந்து இயக்கத்திற்கு எதிர்ப்பு:

ஊட்டியில் சுற்றுலாத் தலங்களுக்கு மினி பேருந்துகள் இயக்க அனுமதி அளித்ததை எதிர்த்து, டூரிஸ்ட் டாக்ஸி, ஆட்டோ மற்றும் ஜீப் ஓட்டுநர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. ஊட்டி ஏ.டி.சி. பகுதி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடன், இதனால் பொதுப்போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயணம் பாதிக்கப்பட்டது.