கோவையில் காயமடைந்த மற்றும் ஆதரவற்ற தெருநாய்களுக்கான காப்பகம் அமைத்திட ஆட்சியரிடம் மனு!

கோவையில் விபத்துகளில் சிக்கி முடங்கிய, தீவிர நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் கொடுமைகளுக்கு உள்ளாகும் தெருநாய்களைப் பராமரிக்கவும், அவற்றிற்குத் தேவையான தங்குமிடம் அமைக்கவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

​துடியலூர் மேட்டுப்பாளையம் சாலையில் விபத்தில் சிக்கிய தெருநாய் ஒன்றைக் காப்பாற்ற முயன்றபோது ஏற்பட்ட சிரமங்களைச் சுட்டிக்காட்டியுள்ள சமூக ஆர்வலர்கள், அவசரக் காலத்தில் உடனடியாகச் செயல்பட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.