டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘பிங்க் ஃபோர்ஸ்’ எனப்படும் சிறப்பு பெண் போலீஸ் ரோந்து படையை அமைக்க டெல்லி காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்ற பெண் போலீசார் அடங்கிய இந்தப் படையினர், பள்ளிகள், கல்லூரிகள், சந்தைகள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
குறிப்பாக பெண்களிடம் நடைபெறும் தொந்தரவு, ஈவ்-டீசிங் உள்ளிட்ட சம்பவங்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் இருப்பை அதிகரிப்பதும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக கூறப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
**பெண்கள் பாதுகாப்பை மையமாகக் கொண்டு டெல்லியில் முன்னெடுக்கப்படும் இந்த ‘பிங்க் ஃபோர்ஸ்’ நடவடிக்கை, இனி எந்த அளவுக்கு செயல்படுத்தப்படுகிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.**









Leave a Reply