கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பட்டணம் பகுதியில், மழைநீர் சேகரிப்பு குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மழைநீர் சேகரிப்பு குட்டையில் கழிவுநீரை விடுவதால் நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் இருப்பதாகவும், குட்டையைச் சுற்றியுள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளின் குடிநீர் பாதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும், கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம், கொசுத்தொல்லை மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பெண்கள் குற்றம்சாட்டினர்.
ஏற்கனவே முறையான சாலை மற்றும் வடிகால் வசதிகள் இல்லாமல் மக்கள் சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், தங்களின் முக்கிய நீர் ஆதாரமான மழைநீர் குட்டையை பாதுகாக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
அத்துடன், பட்டணம் ஊராட்சி பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடப்பதாகவும், இதனால் ஊராட்சி பகுதி சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மக்களின் நீராதாரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply