

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் வழக்கில், சிறப்பாக செயல்பட்டு 2 குற்றவாளிகளை விரைந்து கைது செய்ததுடன், 9.100 கிலோ கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் ச. ராஜா, தலைமைக் காவலர்கள் மு. ஐயப்பன், ச. சரவணசேகர், ம. தினேஷ் கார்த்திக் மற்றும் ரா. செல்வகுமரேசன் ஆகியோரை, திருநெல்வேலி சரக டிஐஜியும், திருநெல்வேலி மாநகர பொறுப்பு காவல் ஆணையருமான முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., மாநகர காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்.
மேலும், அவர்களின் சிறப்பான பணியைப் பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.









Leave a Reply