சுதந்திர தின கிராமசபைக் கூட்டத்தில் பரபரப்பு: ஊராட்சி செயலாளர் மீது பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!
கோவை மாவட்டம், தீத்திபாளையம் ஊராட்சியில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், ஊராட்சி செயலாளர் நாகராஜ் மீது பொதுமக்கள் பல்வேறு புகார்களை முன்வைத்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீத்திபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், கணக்கு விவரங்கள் வாசிக்கப்பட்டபோது ஆழ்துளைக் கிணறு அமைத்ததற்காகக் கொடுக்கப்பட்ட செலவுக் கணக்கு மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.
ஆழ்துளைக் கிணறு அமைக்க ₹50,53,000 (ஐம்பது லட்சத்து ஐம்பத்து மூணாயிரம் ரூபாய்) செலவானதாகப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் செயலாளரிடம் நேரடியாக கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த செயலாளர் நாகராஜ், அச்சுப் பிழை காரணமாகத் தவறுதலாக ஒரு சைபர் சேர்ந்துவிட்டதாகவும், உண்மையான செலவு ₹5,53,000 (ஐந்து லட்சத்து ஐம்பத்து மூணாயிரம் ரூபாய்) மட்டுமே என்றும் கூறி மழுப்பலான விளக்கத்தை அளித்தார்.
இதைத் தொடர்ந்து, ஊராட்சியில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் அடுக்கடுக்கான புகார்களைப் பட்டியலிட்டனர்:
தரமற்ற தடுப்பணை பணி: ஊராட்சியில் கட்டப்படும் தடுப்பணையில் இரும்பு கம்பிகள் ஏதும் பயன்படுத்தப்படாமல், வெறும் காங்கிரட் கற்களை மட்டும் வைத்து அரைகுறையாகப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் மக்கள் குற்றம்சாட்டினர்.
குடிநீர் & கழிவுநீர் பிரச்சினை: ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகவும், சாக்கடை கால்வாய்கள் சுத்தப்படுத்தப்படாமல் அடைத்துக் கிடப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் முறையிட்டனர். டெங்கு மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது என்றும் மக்கள் அச்சப்படுகின்றனர்.
ஊராட்சி செயலாளர் மற்றும் பணியாளர்கள் சரியாக அலுவலகத்துக்கு பணிக்கு வருவதில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குப்பைகள் தேக்கம்: வீதிகள் தோறும் குப்பைகள் முறையாக அள்ளப்படாமல் தேங்கிக் கிடப்பதாக
கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் ஒன்றுதிரண்டு செயலாளரிடம் புகார்களைத் தட்டிக் கேட்ட சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









Leave a Reply