கோவை மாவட்டம் மருதமலை சாலை, வடவள்ளி பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக பெரிய அளவில் குழி தோண்டப்பட்டிருந்தது.
ஆனால், அந்தப் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை பலகைகள் அல்லது தடுப்புகள் அமைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண், எதிர்பாராத விதமாக குழிக்குள் வாகனத்துடன் தவறி விழுந்தார்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அந்தப் பெண் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டார்.
பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் இடங்களில் உரிய தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை வடவள்ளியில் அதிர்ச்சி! முன்னெச்சரிக்கை பலகையின்றி தோண்டப்பட்ட குழியில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த பெண்!

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply