மேட்டுப்பாளையம் சாலையில் உலா வந்த காட்டு யானை! போக்குவரத்து பாதிப்பு – வாகன ஓட்டிகள் அச்சம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் சாலையில் காட்டு யானை திடீரென உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையின் நடுவே யானை நடமாடியதால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
யானை சாலையைக் கடந்து வனப்பகுதிக்குள் சென்ற பின்னர் போக்குவரத்து சீரானதாக தகவல் வெளியாகியுள்ளது.