கோவை மாவட்டம் அலந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட நடுநிலைப் பள்ளியில், கடந்த சுமார் 2½ ஆண்டுகளாக மதில்சுவர் இல்லாததால் பள்ளி வளாகத்தை ஒட்டிய பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தேங்கியுள்ள குப்பைகளில் இருந்து வீசும் துர்நாற்றம், வகுப்பறை ஜன்னல்கள் வழியாக பள்ளிக்குள் வருவதால், மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.
மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மதில்சுவர் அமைத்து குப்பைகள் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2½ ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பும் பெற்றோர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
அலந்துறை நடுநிலைப் பள்ளியில் அவலம்! 2½ ஆண்டுகளாக மதில்சுவர் இல்லை – குப்பை குவியலால் மாணவர்கள் பாதிப்பு

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply