ரூ.10 கூடுதல் வசூல்: மேலும் 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்!

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக வந்த புகார்களின் அடிப்படையில், மேலும் 150 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று செப்டம்பர் 2ஆம் தேதி பிற்பகல் வரை கிடைத்த புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே 67 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 150 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பது தொடர்ந்தால், பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.