கோவையில் ‘SRV The Winning Edge’ மாரத்தான் டி-ஷர்ட் அறிமுக விழா

கோவையில் நடைபெற உள்ள ‘SRV The Winning Edge Marathon’ போட்டிக்கான டி-ஷர்ட் அறிமுக விழா, கோவை விஜய் பார்க் இன் ஹோட்டலில் நடைபெற்றது.

SRV The Winning Edge Sports and Event Management Centre சார்பில் நடைபெற்ற விழாவிற்கு அதன் தலைவர் எஸ். ரவீந்திரநாத் வர்மன் தலைமை தாங்கினார். விளையாட்டுத்துறை செயலாளர் ஜி. கஸ்தூரித்திலகம் வரவேற்புரை வழங்கினார்.

விழாவில் கோவை GST நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் பொன்னுசாமி, SRV நிர்வாக இணைச் செயலாளர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும், கோவை மாவட்ட தடகள சங்கம் மற்றும் கோவை தடகளக் கழகத்தின் மூத்த துணைத் தலைவர் கோவை ரமேஷ், மருத்துவக் குழுத் தலைவர் டாக்டர் சுமன் சி.பி.எஸ்., கோவை மாவட்ட தடகள சங்க செயலாளர் பி.கே. சம்சுதீன், பொருளாளர் டாக்டர் ஜான் சிம்கராயர், தொழில்நுட்பத் தலைவர் எஸ். ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து, மாரத்தான் போட்டிக்கான டி-ஷர்ட் அறிமுக விழா அனைத்து சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விழாவில் SRV The Winning Edge Sports and Event Management Centre நிர்வாகிகள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் தடகளத் துறையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் வி. சிவக்குமார் நன்றியுரை வழங்கினார்.