மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன், மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என்ற நோக்கிலேயே சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் அதில் அரசியல் கட்சிகளின் பெயர்கள் தவறுதலாக இடம்பெற்றிருந்ததால், அந்த சுற்றறிக்கை உடனடியாக வாபஸ் பெறப்பட்டதாக கூறினார்.
மேலும், மாணவர்களின் ஜனநாயக உரிமைகளையோ போராட்ட உரிமையையோ கட்டுப்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.










Leave a Reply