101 வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் பூமி பூஜை – கார்த்திபுரத்தில் சிறப்பு நிகழ்வு

வாஸ்து நாளை முன்னிட்டு, புதிய வீடு கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள கார்த்திபுரம் வீட்டுமனைப் பிரிவில் நடைபெற்றது.

இதில், கார்த்திபுரம் வீட்டுமனைப் பிரிவில் இடம் வாங்கிய 101 வாடிக்கையாளர்கள், ஒரே நேரத்தில் தங்களது மனைகளில் வீடு கட்டுவதற்கான பூமி பூஜையை மேற்கொண்டனர்.

சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள கார்த்திபுரம் வீட்டுமனைப் பிரிவில், சுமார் 4 ஆயிரம் வீட்டுமனைகள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பூமி பூஜை நிகழ்ச்சியை சின்னத்திரை நட்சத்திரம் ஈரோடு மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திபுரம் ரியல் எஸ்டேட் உரிமையாளர் கார்த்திகேயன், புதுமையை விரும்பும் மக்களுக்காக கார்த்திபுரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விமான ஓடுதளம் போன்று அகலமான சாலைகள், பூமிக்கு அடியில் மின்கம்பிகள், ஒவ்வொரு மனைகளுக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்ட கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய் வசதிகள் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த வீட்டுமனைப் பிரிவு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், கார்த்திபுரத்தில் இடம் வாங்கிய 101 வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் வீடு கட்டுவதற்காக பூமி பூஜை செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவையின் அடையாளமாக காந்திபுரம் விளங்குவது போல, அதற்கு அடுத்தபடியாக கார்த்திபுரம் உருவாகி வருவதாகவும் அவர் கூறினார்.