கோவை மாவட்டம்
வெள்ளலூர் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு பல ஆண்டுகளாக போராடும் மக்கள்… புகார்கள் மீது நடவடிக்கை இல்லை என பரபரப்பு குற்றச்சாட்டு!
கோவை மாவட்டம், வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 15, திருவாதிரை பேரடைஸ் குடியிருப்பு பகுதியில், கடந்த 6 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.
சாலை அமைப்பதற்கான பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல், பாலம் கட்டுவதாக சொல்லி சென்ட்ரிங் கம்பிகள் மட்டும் அமைக்கப்பட்ட நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குடியிருப்போர் தெரிவிக்கின்றனர்.
இதனுடன், குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதாகவும், ஆங்காங்கே குப்பைகள் எரிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், கழிவுநீர் கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த பிரச்சினைகள் குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, பல செயல் அலுவலர்கள் வந்து சென்றும், புகார்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டும் இதுவரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என சங்கத் தலைவர் மு. கதிர்வேலு குற்றம்சாட்டுகிறார்.
புகார் மனுக்களை அதிகாரிகள் பெற்றுக்கொள்கிறார்கள்… ஆனால் அதன்பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருவாதிரை குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் மு. கதிர்வேலு, துணைத்தலைவர் திரு. ஸ்ரீதர் மற்றும் பொறுப்பாளர்கள், சாலை வசதி, குப்பை அகற்றுதல் மற்றும் கழிவுநீர் கால்வாய் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 ஆண்டுகளாக தொடரும் பிரச்சினைக்கு எப்போது தீர்வு?
பல செயல் அலுவலர்கள் மாறியும் மாறாத நிலை ஏன்?
மக்களின் புகார்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் எப்போது நடவடிக்கை எடுக்கும்?
அதிகாரிகள் மாறுகிறார்கள்… மக்கள் அவதி மட்டும் மாறவில்லை! 6 ஆண்டுகளாக தீராத வெள்ளலூர் பிரச்சினை!

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply