தமிழகத்தில் சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டு மையங்கள்!

ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் தமிழகத்தின் பதக்க எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில் சிறப்பு விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அறிவித்துள்ளார்.
கல்வராயன் மலையில் பழங்குடியின இளம் வீரர்களுக்காகவும், நாகையில் கடற்கரை விளையாட்டுகளுக்கும், செங்கல்பட்டில் இறகுப்பந்து மற்றும் மேசைப்பந்துக்கும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.