தேசிய அரங்கில் 10 பதக்கங்கள் வென்று கோவை தாய்பாக்ஸிங் வீரர்கள் சாதனை!

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் நகரில் நடைபெற்ற 17வது தேசிய தாய்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஆகஸ்ட் 21 முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில், நாடு முழுவதும் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு அணியின் சார்பில் 85 வீரர்கள் கலந்து கொண்ட நிலையில், கோவை மாவட்ட தாய்பாக்ஸிங் சங்கத்தின் சார்பில் கென்ஷு கலை மற்றும் விளையாட்டு அகாடமி மற்றும் சான் தற்காப்புக் கலை அகாடமியைச் சேர்ந்த 10 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்ட கோவை வீரர்கள், வரும் நவம்பர் மாதம் கோவாவில் நடைபெறவுள்ள உலக அளவிலான தாய்பாக்ஸிங் போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது

இது கோவை தாய்பாக்ஸிங் விளையாட்டிற்கு மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு தாய்பாக்ஸிங் சங்கத் தலைவர் ரென்ஷி டாக்டர் பிராங்க்ளின் பென்னி, நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் ரென்ஷி கே. ஷீக் அப்துல்லா, கோவை மாவட்ட தாய்பாக்ஸிங் சங்கத் தலைவர் ரென்ஷி பி. அமிர்தராஜ், பொருளாளர் ரென்ஷி எஸ். எம். சூர்யா பிரபு,
சங்க நிர்வாகிகள் சிவராமச்சந்திரன், ஜெயவர்த்தனவேல், திலக வர்ஷன்,
மற்றும் பயிற்சியாளர்கள் பெற்றோர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

மேலும் தேசிய அரங்கில் பதக்கங்கள் வென்ற கோவை வீரர்கள், உலக அரங்கிலும் வெற்றி பெற்று இந்தியா, தமிழ்நாடு மற்றும் கோவைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது