முதலமைச்சர் விஜய்யின் வாகன அணிவகுப்பை திடீரென மறித்த 2 பேர்!

செயலகத்திற்கு முதலமைச்சர் விஜய் வந்தடைந்தபோது, அவரது வாகன அணிவகுப்பை இரண்டு நபர்கள் திடீரென மறித்து, நீதி கேட்டு முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து, இருவரையும் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் முதலமைச்சரின் கார் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
முதலமைச்சரின் பாதுகாப்பையும் மீறி இருவர் வாகன அணிவகுப்பை நெருங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் முன்வைத்த கோரிக்கை மற்றும் போராட்டத்திற்கான காரணம் குறித்து முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.