33 ஆண்டுகளாக நீடிக்கும் கணபதி மாநகர் வீட்டு வசதி பிரச்சனை – தீர்வு கோரி உரிமையாளர்கள் கோரிக்கை

கோவை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் கோவை வீட்டு வசதிப் பிரிவு ஆகியவை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் நடுவர் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கணபதி மாநகர் வீட்டு உரிமையாளர் நலப் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

​33 ஆண்டுகளாகத் தொடரும் இச்சிக்கலில், வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி (28-08-2026) சட்டப்பேரவையில் நடைபெறும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில், இப்பிரச்சனை குறித்துத் தானாக முன்வந்து விவாதித்துத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நடுவர் தீர்ப்பாயத் தீர்ப்பின்படி நில விலையை மறு நிர்ணயம் செய்து, உடனடியாக அரசாணை (G.O.) வெளியிட்டு, அனைவருக்கும் கிரயப் பத்திரம் (Sale Deed) வழங்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கேற்ப, பின்னோக்கி கூடுதல் வட்டி போடுவதை நிறுத்தி நில விலையைச் சீரமைக்க வேண்டும்.

ஏற்கனவே கூடுதல் தொகையை வட்டியுடன் செலுத்திய ஒதுக்கீட்டாளர்களுக்கு, அத்தொகையை 6% வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும் .

‘FoxPro’ மென்பொருள் பிழையால் 9 முதல் 17 ஆண்டுகள் வரை அங்கீகரிக்கப்படாத கழித்து வரவு வைக்கும் முறையைக் கைவிட்டு, செலுத்திய பணத்திற்குச் சரியான கணக்கீட்டை வழங்க வேண்டும்.