கோயம்புத்தூர் கே.ஜி.சாவடி பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஊழல் பாசறைப் பொறுப்பாளர் பா.முருகன் என்பவர், கேரளா செல்லும் அரசுப் பேருந்துகள் கே.ஜி.சாவடி நிறுத்திற்கு வராமல் பைபாஸ் பாலம் வழியாகச் செல்வது குறித்துப் பாரதப் பிரதமர் அலுவலகத்திற்குப் புகார் மனு அனுப்பியிருந்தார்.
இந்த மனுவின் பேரில் விசாரணை நடத்திய கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் சாலை அரசுப் போக்குவரத்துச் கழக மேலாளர், “அனைத்து அரசுப் பேருந்துகளும் கே.ஜி.சாவடி வழியாகத்தான் செல்கின்றன” என்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆனால், இந்த பதில் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும், கள நிலவரத்திற்கு எதிராக அதிகாரி முன்னுக்குப் பின் முரணாகப் பொய்யான பதிலை அளித்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும் பா.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
முக்கியக் கோரிக்கைகள்:
உண்மைக்கு மாறான பொய்யான அறிக்கையை வழங்கிப் புகாரை மூடி மறைக்க முயன்ற போக்குவரத்துத் கழக மேலாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும்
அரசு விதிகளை மீறி கே.ஜி.சாவடிக்குள் செல்லாமல் பைபாஸ் பாலம் வழியாகப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும்.
பேருந்துகள் சரியான வழித்தடத்தில் செல்கின்றனவா என்பதைக் கண்காணிக்கத் தவறிய செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் (கண்காணிப்பு ஆய்வாளர்கள்) மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பேருந்துகள் அனைத்தும் கே.ஜி.சாவடி பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படுவதை அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.










Leave a Reply