

கோவை, ஆக. 25: கோவை அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் சார்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ‘ஓணம் சத்யா’ சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கு எம் இன் ஹோட்டல் கோயம்புத்தூரின் பொது மேலாளர் சுஷீன் ஆர். மற்றும் முன் அலுவலக மேலாளர் பி. கோபால கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அமிர்தா IIHMCT-யின் ஏ.ஓ. புவனேஸ்வரி, துறைத் தலைவர் செஃப் கார்த்திக் கேசவன், அகாடமிக் ஹெட் குஹா பிரியா ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவுக்கு அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தலைமை செயல் அதிகாரி சுரேஷ் குமார் ஆர். தலைமை வகித்தார்.
ஓணம் பண்டிகையின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையில் மலர் அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து பாரம்பரிய முறையில் ஓணம் சத்யா விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
மாணவர்கள் ஓணம் பண்டிகையின் பாரம்பரியத்தை அறிந்து கொள்ளும் வகையிலும், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்க்கும் வகையிலும் நடைபெற்ற இவ்விழா சிறப்பாக நிறைவடைந்தது.









Leave a Reply