கோவையில் மாணவர் தற்கொலை விவகாரம் – காவல் நிலையத்தில் குடும்பத்தினர் போராட்டம்!

கோவை பீளமேடு பகுதியில், 11ஆம் வகுப்பு மாணவர் அகிலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
இந்தச் சம்பவத்தில் சாதிய வன்கொடுமை நடந்ததாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி, மாணவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர் அகிலனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மாணவரின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை உரிய விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.