அகிலன் வழக்கில் சக மாணவர்கள் இருவர் கைது!

கோவையில், 11-ஆம் வகுப்பு மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், சக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர் அகிலனின் மரணம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சக மாணவர்கள் இருவரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர் அகிலனின் மரணத்திற்கான காரணம் குறித்தும், இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அகிலன் வழக்கில் அடுத்தடுத்துத் திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.