உலக யானைகள் தின விழிப்புணர்வு பேரணி 2026

E7 தமிழ் செய்திகள்… உண்மை, உடனுக்குடன், உங்கள் மொழியில்!

​ஆகஸ்ட் 12, உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் மிக பிரம்மாண்டமான ‘உலக யானைகள் தின விழிப்புணர்வு பேரணி 2026’ நடைபெற உள்ளது.

​பெரிய காடுகளை உருவாக்கும் முதன்மையான காரணியாக விளங்கும் யானைகளைப் பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக வரும் நாட்களில் யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

​இதைச் சுட்டிக்காட்டி, யானைகளைப் பாதுகாக்கவும், உலக யானைகள் தினத்தை சிறப்பிக்கும் வகையிலும், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள்: 12 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

நேரம்: காலை 10:00 மணி

இடம்: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி


​தமிழ்நாடு வனத்துறை (கோவை வனக்கோட்டம்), வெள்ளிங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பு, இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கோவை, மற்றும் அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி கோவை ஆகியவை இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை நடத்துகின்றன.

​’யானைகளை பாதுகாப்போம்… எதிர்காலத்தை பாதுகாப்போம்!’ மற்றும் ‘காடு பாதுகாப்போம்… யானைகளை பாதுகாப்போம்!’ என்ற உயரிய நோக்கில் நடைபெறும் இந்த நிகழ்வில், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தங்களது ஆதரவைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

​வாருங்கள்! குரல் கொடுப்போம்! யானைகளைக் காப்போம்!

​மேலும் பல தகவல்களுக்கு இணைந்திருங்கள் E7 தமிழ் NEWS மற்றும் எங்கள் இணையதளம் www.e7tamilnews.com.”