கோவை மாவட்டத்தில் மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கவுண்டம்பாளையம் மற்றும் கவுண்டர் மில் பகுதிகளிள் இரண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டன. ஆனால் அதில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் கவுண்டம்பாளையம் மற்றும் கவுண்டர் மில் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வராமல் அது மேல போடப்பட்டிருக்கும் மேம்பாலத்தின் வழியாக பேருந்துகள் பயணிப்பதால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் தினந்தோறும் மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதியில் பணிக்கு செல்ல இயலாமல் மக்கள் பெரும் சிரமப்படுகின்றன. எனவே கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.